வியாழன், 14 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (15:51 IST)

ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை – கனிமொழி கருத்து!

ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக கன்னித்தீவு போல இழுத்துக் கொண்டிருந்த ரஜினியின் அரசியல் வருகை இப்போது உறுதியாகியுள்ளது. ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் ரஜினி அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை எனவும் கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகையை எதிர்ப்பவர்களில் திமுக, நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் முன்னிலையில் உள்ளனர். இதற்குக் காரணம் ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்குகள் பிரிக்கப்படும் என்ற அச்சத்தாலேயே அவர்கள் இப்படி செய்வதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறியுள்ளார். அதில் ‘ ரஜினியின் வருகையால் திமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஜனவரி மாதம்தான் கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்பிறகு கருத்துச் சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆனால் அது திமுகவின் வெற்றிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று என்னால் சொல்லமுடியும். மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்பது உறுதி" எனக் கூறியுள்ளார்.