ஏப்ரல் 1 ஆம் தேதி ரஜினி கட்சி தொடங்குவார்... ஈவிகேஎஸ்இளங்கோவன்
நடிகர் ரஜினி சமீபத்தில் தனது அரசியல் அறிவிப்பை அறிவித்தார். ஆனால் இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. தற்போது அண்ணாத்த ஷூட்டிங்கில் பிஸியாக உள்ள 10 நாட்களின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்த வருடம் தொடகத்தில் தனது கட்சியை அறிவிப்பார் என தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின்ப் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
ரஜினிகாந்த் அடுத்தவருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கப்பட்டும் அன்றுதான் முட்டாள்கள் தினம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிவிட முடியாது. எம்ஜிஆருக்கு நிகரான செல்வாக்கை கொண்ட சிவாஜி மக்களைக் கணக்குப் போடத் தெரியாமல் தோல்வியடைந்தார் எனத் தெரிவித்துள்ளார்.