1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (20:02 IST)

ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவார் என கூறிய நிர்வாகி நீக்கம்: ரஜினி மக்கள் மன்றம் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் உறுதிபட கூறி விட்டார். இருப்பினும் அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் செய்தியை பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இவ்வாறு வதந்தியை பரப்பிய ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகளை ரஜினி மக்கள் மன்ற அதிரடியாக நீக்கியுள்ளது.
 
இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள்‌ மன்றத்தின்‌ கீழ்கண்ட நிர்வாகிகள்‌,
 
1. திரு.ராஜன்‌ - மாவட்ட துணை செயலாளர்‌
 
2. திரு.சதீஷ்‌ பாபு - மாவட்ட சிறுபாண்மை அணி, இணைச்செயலாளர்‌
 
3. திருமதி ஈஸ்வரிமதி - மாவட்ட மகளிர்‌ அணி செயலாளர்‌.
 
4. திரு. அசோக்குமார்‌ - ராஜாக்கமங்கலம்‌ ஒன்றிய செயற்குழு உறுப்பினர்‌.
ஆகியோர்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்‌தின்‌ ஒற்றுமையை சீர்குலைக்கும்‌ வகையிலும்‌, மன்றத்‌தின்‌ கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக, அவதூறு பரப்பி தலைவரின்‌ பெயருக்கு களங்கம்‌ ஏற்படுத்தும்‌ வகையிலும்‌ செயல்பட்ட காரணத்தினால்‌ அடிப்படை உறுப்பினர்‌ உட்பட அனைத்து பொறுப்புகளில்‌ இருந்தும்‌ நம்‌ அன்புத்தலைவரின்‌ ஒப்புதலுடன்‌ உடனடியாக நீக்கப்படுகிறார்கள்‌. இவர்களுடன்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தின்‌ நிர்வாகிகளும்‌, உறுப்பினர்களும்‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வித தொடர்பும்‌ வைத்துக்கொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுறார்கள்‌.
 
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.