திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (11:53 IST)

போயஸ் கார்டன் அரசியல் வட்டாரத்தில் தனுஷ்! – இன்று பூமி பூஜை!

பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் போயஸ் கார்டனில் வாங்கியுள்ள இடத்திற்கு பூமி பூஜை செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லம், நடிகர் ரஜினிகாந்த் இல்லம் என அரசியல் வட்டாரத்தின் பிஸியான இடமாக இருப்பது போயஸ் கார்டன். தற்போது தனது மாமனார் ரஜினி வீடு உள்ள போயஸ் கார்டனிலேயே நடிகர் தனுஷ் இடம் ஒன்றை வாங்கியுள்ளார்.

அடுத்ததாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க அமெரிக்கா செல்ல உள்ள தனுஷ் அதற்கு முன்பாக போயஸ் கார்டன் இடத்தில் பூமி பூஜை செய்துள்ளார். இன்று நடைபெற்ற இந்த பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது துணைவியார் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.