புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (20:41 IST)

கொட்டும் பனியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ரஜினி (வீடியோ)

அதிகாலையில் கொட்டும் பனியில் நடிகர் ரஜினிகாந்த் நடை பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட பட ரிலீசுக்கு பிறகு முருகதாஸின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.  தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினி, வீட்டில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர் பொதுவெளியில் சுதந்திரமாக  செல்வது அபூர்வம். யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வெளியில் சென்றுவருவார். அத்தகைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் . அந்த வகையில் ரஜினி ஆட்டோவில் சென்ற நிகழ்வு வைரலானது. தற்போது ரஜினி  தனது இல்லம் உள்ள பகுதியில் அதிகாலையில் கொட்டும் பனியில் நடை பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.