திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (18:47 IST)

ரஜினி பட நடிகர் வீட்டிற்கு சீல்….ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினி படத்தில் வில்லனாக நடித்த சுனிஷ் ஷெட்டி. இவரது அடுக்குமாடி குடியிருப்பில் கொரொனா பரவலை அடுத்து  மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகரும்,ரஜினியின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்த சுனில் ஷெட்டி. இவரது நடிப்பை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் சுனில் ஷெட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தற்போது அக்குடியிருப்பில் வசித்து வரும் சிலருக்கு கொரொனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனவே அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சுனில் ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக மும்மை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.