வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (10:47 IST)

மகள் திருமண வரவேற்பில் ரஜினி ஆட்டம் பாட்டம் ! - வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணம் இன்ற் நடைபெற்றது. அதற்கு முன் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பில் ரஜினிகாந்த் ஆட்டம் ஆடி மணமக்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவிற்கும் தொழிலதிபரின் மகன் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவரும் முறையாக விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தை சௌந்தர்யாவிடம் வளர்கிறது.

இதையடுத்து செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று மறுமணம் நடந்து முடிந்துள்ளது. இதை முன்னிட்டு நேற்று இவர்களின் திருமண வரவேற்பு நடந்து முடிந்தது. அந்த திருமண வரவேற்பு நிக்ழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி தனது படங்களின் பாடல்களுக்கு நடனமாடி மக்களையும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினார்.

ரஜினி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.