ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:54 IST)

மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அசத்திய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடந்துள்ளது.


 
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11 ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. 


 
நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் வணங்காமுடியின் மகனான விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளாா். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது. 


 
இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று கோலாகலமாக நடந்தது. ரஜினியும் , லதா ரஜினிகாந்தும் சேர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மணமக்களை அறிமுகப்படுத்தினர். 


 
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


 
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.