1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (08:59 IST)

சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்: யார் அந்த மூன்று பேர்?

தன் வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று ஆண்கள் யார் யார் என்பதை ரஜினி மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா -  தொழிலதிபர் விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று மறுமணம் நடைபெற உள்ளது. 
 
இந்நிலையில் சவுந்தர்யா தனது வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள் யார் என்பதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதலில் தனது அன்பான அப்பா ரஜினிகாந்த், தனது செல்ல மகன் வேத். மூன்றாவது விசாகன் என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலர் உங்களின் எண்ணம் போல வருங்கால வாழ்க்கை இனிப்பாக அமையட்டும் என வாழ்த்து சொல்லி வருகின்றனர்.