ஞாயிறு, 25 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (15:28 IST)

பொன்னியின் செல்வன் பார்த்தப்புறம் அதெல்லாம் நான் செய்யுறதே இல்லை… ரஹ்மான் சிலிர்ப்பு!

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்துக்கு இசையமைத்துள்ள ரஹ்மான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “இந்த படத்தைப் பார்த்த பின்னர் நான் ஓடிடிகளில் வரும் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். நமது வரலாற்றின் பெருமையை சொல்லும் படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.