செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (09:41 IST)

ஏ ஆர் ரஹ்மான் பாலோ செய்யும் சீரியல் நடிகை!

ரஹ்மான் டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் ஆர்வமாக இயங்கி வருபவர் என்பது அவரின் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.

டிக்டாக் மூலமாக பிரபலமான கேப்ரில்லா செல்லஸ் இப்போது சன் தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறார். மற்ற சீரியல் நடிகைகள் போல இல்லாமல் கேப்ரில்லா டஸ்கி நிறம் கொண்டவர். இது அவருக்கு தனி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. அதில் ஒருவராக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானும் உள்ளார். அவர் மொத்தமாக இன்ஸ்டாகிராமில் 64 பேரைதான் பாலோ செய்கிறார். அதில் ஒருவராக கேப்ரில்லா செல்லாஸ் இருப்பது  குறிப்பிடத்தக்கது.