வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (19:10 IST)

சிரஞ்சீவி காமன் டிபி மோஷன் போஸ்டரை வெளியிட்ட தமிழ் இயக்குனர்!

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அவர்களின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் இன்றே சமூக வளைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் தமிழ் திரைப்பட இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் சிரஞ்சீவியின் பிறந்தநாள் குறித்த காமன் டிபி மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சிரஞ்சீவி தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிரஞ்சீவி தற்போது ’ஆச்சாரியா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு நாளை அவருடைய பிறந்த நாளின்போது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது