1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (11:49 IST)

ராகவா லாரன்ஸ் - ஜிவி பிரகாஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் கதிரேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
ஜிவி பிரகாஷ் இசையில் கேபி செல்வா இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்பதும் இதுவும் அவரது பாணியில் உருவாகும் ஒரு திகில் படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சில முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிய இருப்பதாகவும் தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சற்று முன் வெளியாகி உள்ள ‘ருத்ரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது