1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (16:24 IST)

’’ நண்பா உனது நடிப்பு பிரமாதம் ! என்னால் வெயிட் பண்ண முடியில…’’…,அக்‌ஷய் குமார் நடிப்பை புகழ்ந்த சூப்பர் ஸ்டார்

கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம்’ லட்சுமி பாம்’ என்ற பெயரில் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. அவரது இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

தற்போது கொரொனா காலம் என்பதால் இப்படத்தை திரையில் வெளியிடாமல் டிஜிட்டடல் வெளியீடாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அஷ்சய் குமார் நான் இத்தனை வருடம் சினிமா வாழ்க்கையில் இந்த லட்சுமி பாம் படத்தில் நான் மனரீதியாக நடித்துள்ளேன் என்று தெரிவித்து, இப்பத்தில் தான் அதிக டேக்குகள் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில்  தமிழ், தெலுங்கை தொடர்ந்து காஞ்சனா திரைப்படம் தற்ப்போது இந்தியில் அக்சய் குமாரை வைத்து லட்சுமி பாம் படத்தை லாரன்ஸ் இயக்கியுள்ளார் ராகவாலாரன்ஸ்.

இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த 9 ஆம் தேதி யூடியூபில் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை மிரட்டி எடுத்துள்ளது.

இந்த டிரைபலர் குறித்து நடிகர் அமீர் கான்  தனது டுவிட்டர் பக்கத்தில் அக்‌ஷய் குமாருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார். அதில், டியர் அக்‌ஷகுமார் என்ன சூப்பரான டிரைவர் , நனது நண்பா என்னால் காத்திருக்க முடியவில்லை .உனக்கு மிகப்பெரிய வாழ்த்துகள் உங்களது நடிப்பு அபாரமகவுள்ளது…எல்லோருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த அக்‌ஷய், உங்களது ஊக்குவிப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஓடிடியில் வெளியானாலும் இப்படம் அன்றைய தினம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,ஐக்கிய அமீரகத்திலுள்ள திரையரங்கிலும் வெளியாகும் எனக் கூறியுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=xw0gE8QA1W0&feature=emb_title