செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:55 IST)

சூர்யா படக்குழுவில் இணைந்த ராதிகா!

நடிகை ராதிகா இப்போது சுர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் திரையுலகில் 43 ஆண்டுகளை நிறைவு செய்தார் நடிகை ராதிகா. இதையொட்டி திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போதும் கூட அவர் பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் அருண் விஜய் படம் என படப்பிடிப்புகளில் கலந்துகொண்ட அவர் இப்போது சூர்யா நடிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

சூர்யாவோடு எடுத்துள்ள புகைப்படங்களை அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்