வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (13:10 IST)

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை ராதிகா ஆப்தே… குவியும் வாழ்த்துகள்!

இந்தி சினிமாவில் ஆஹா லைஃப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2 , தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

இப்போது இந்தியாவில் ஓடிடி நடிகை என சொல்லப்படும் அளவுக்கு பல நேரடி ஓடிடி படங்கள் மற்றும் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. அவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். ராதிகா, தமிழ்சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், சித்திரம் பேசுதடி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில்  நடித்திருந்தார்.

இந்நிலையில் ராதிகா ஆப்தே தான் இப்போது கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இவருக்கும் பெனடிக் டெய்லர் என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது அவர்கள் குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளனர்.