வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (09:22 IST)

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது!

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஸ்ரீநாத் பாசி. அவர்  நடிப்பில் வெளியான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கலக்கியது. இதையடுத்து அவர் தமிழ் சினிமாவிலும் விரைவில் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் இவர் கேரள போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் அவர் ஓட்டிச்சென்ற கார், முகமது பஹீம் என்பவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதையடுத்து பஹீம் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ஸ்ரீநாத் பாசி, போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட பார்ட்டியில் கலந்துகொண்டதாக அவர் மேல் குற்றச்சாட்டு எழுந்தது. அடிக்கடி இவர் இதுபோன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.