1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:57 IST)

அல்லு அர்ஜூன் ‘புஷ்பா’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று மாலை ‘புஷ்பா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த படம் உலகம் முழுவதும் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது