1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (17:39 IST)

அல்லு அர்ஜுன் & பஹத் பாசில் நடித்துள்ள புஷ்பா… கேரளாவில் விலைபோகாத சோகம்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் கேரள விநியோக உரிமையை வாங்க எந்த நிறுவனமும் தயாராக இல்லையாம்.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது  காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கிறார்.

அல்லு அர்ஜுன் படங்களுக்கு கேரளாவில் எப்போதுமே மிகப்பெரிய மார்கெட் உண்டு. ஆனால் கோவிட்டுக்கு பின் அங்கு இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத சூழலில் மிகப்பெரிய விலை கொடுத்து புஷ்பா படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லையாம்.