1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (13:31 IST)

எதற்கும் துணிந்தவன் - காத்து வாங்கும் திரையரங்குகள்!

நாமக்கல்லில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை காண ஆர்வம் காட்டாத ரசிகர்களால் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

 
கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்த படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் எழுந்தது.
 
இந்நிலையில் இன்று சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்கு ஒரு சிலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் தந்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை திரையிடக் கூடாது என பாமகவினர் வலியுறுத்தி வந்தனர். 
 
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்களின் வருகை இல்லாததால் சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. முதல் காட்சி காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனாலும் ரசிகர்களின் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.