1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (21:26 IST)

பாலிவுட் நடிக்கும் ஆசை இருக்கா? கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் சொன்ன சூர்யா!

நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சொன்ன தேதியில் ரிலிஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது. ஜெய்பீம் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாக உள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஐந்து மொழிகளில் நாளை வெளியாகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொண்ட சூர்யாவிடம் பாலிவுட்டில் நடிக்க ஆசை இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா ‘பாலிவுட் சென்றுதான் திறமையை நிரூபிக்கவேண்டும் என்று இல்லை. இங்குள்ள நடிகர்கள் திறமையான நடிகர்களாக உள்ளார்கள். எங்களால் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைக்க முடியும்’ என சுற்றி வளைத்து அந்த ஆசை இல்லை என்பதைக் கூறியுள்ளார்.