1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Raj Kumar
Last Modified: புதன், 22 மே 2024 (16:27 IST)

அந்த அஜித் படத்தால் ரெண்டாவது தடவை ஆனந்த கண்ணீர் வந்துச்சு..! ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!

Ajithkumar
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். இவர் தனக்கென்று ஒரு பெரிய ரசிக பட்டாளத்தையே வைத்திருக்கிறார் என கூறலாம். ஆரம்பக்காலக்கட்டங்களில் அஜித் காதல் தொடர்பான திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்தார்.



அப்போதெல்லாம் ஆக்ஷன் திரைப்படங்களை விடவுமே காதல் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அப்படியாக 1996 இல் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை.

இந்த திரைப்படத்தை இயக்குனர் அகத்தியன் இயக்கியிருந்தார். தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சிவசக்தி பாண்டியன் இந்த படத்தை தயாரித்து விநியோகம் செய்திருந்தார். இந்த நிலையில் ஒரு நேர்க்காணலில் காதல் கோட்டை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை சிவசக்தி பாண்டியன் பகிர்ந்திருந்தார்.

Kadhal Kottai


அதில் அவர் கூறும்போது “காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து எனக்கு போன் வந்தது. காதல் கோட்டைக்கு இந்தியாவின் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என கூறினார்கள். என் வாழ்க்கையில் அன்றைக்குதான் இரண்டாவது தடவையாக கண் கலங்கினேன்.

இயக்குனர் பாலச்சந்தர், பாரதிராஜா, ஸ்ரீதர், ஏ.சி திரிலோகச்சந்தர், மணிரத்தினம், பாக்கியராஜ் இப்படி சினிமாவில் இருக்கும் பெரிய ஜாம்பவான்களுக்கு கூட பெஸ்ட் ட்ரைக்டர் ஆஃப் இந்தியா விருது கிடைக்கவில்லை.


42 வருடம் தமிழில் யாருக்கும் கிடைக்காத அந்த விருது எனது தயாரிப்பில் வந்த படத்திற்கு கிடைத்தது நினைக்கும்போது இப்போதும் பெருமையாக இருக்கிறது” என கூறுகிறார் சிவசக்தி பாண்டியன்.