1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Raj Kumar
Last Updated : புதன், 22 மே 2024 (15:27 IST)

"பெரிய நடிகர்கள் எல்லாம் வெளியே நாம தெரிய கூடாதுன்னு நினைக்கிறாங்க!" - ரஜினி குறித்து பேசிய ராதாரவி..!

Rajnikanth
கோலிவுட்டில் பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் ராதாரவி. கமல்ஹாசன் ரஜினியில் துவங்கி பல முன்னணி நடிகர்களோடு வில்லனாக நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார் ராதா ரவி.



தனக்கும் ரஜினிக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தப்போதும் தங்களது நட்பு நீண்ட காலங்களாக இருந்து வருகிறது என்கிறார் ராதாரவி. ஒருமுறை அவர் காலையில் படப்பிடிப்புக்கு கிளம்பி கொண்டிருந்தப்போது அவரிடம் பேச வேண்டும் என ரஜினிகாந்த் அழைத்திருக்கிறார்.

அந்த சமயத்தில் ரஜினி படம் ஒன்றில் ராதாரவி வில்லனாக நடிக்க இருந்தது. அங்கு சென்றப்போது வாழ்க்கையே பிடிக்கவில்லை, நடிக்கவே விருப்பமில்லை என்றெல்லாம் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அதற்கு சமாதானம் கூறிய ராதாரவி “நாங்க இருக்கோம் சார் பார்த்துக்கலாம்” என ஆறுதல் கூறிவிட்டு கிளம்ப இருந்திருக்கிறார்.

Radharavi


அப்போது அவரை அழைத்த ரஜினிகாந்த் “நீங்கள் என்னுடன் நடிக்க இருந்த படத்தில் உங்களுக்கு பதிலாக வில்லன் நடிகரை மாற்றியுள்ளனர். அதை கூறவே நான் உங்களை வீட்டிற்கு அழைத்தேன்” என தயங்கியப்படியே கூறியுள்ளார். ரஜினி  தனது நண்பன் என்றாலும் தனக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் அதிருப்தி அடைந்துள்ளார் ராதாரவி.

இதுபோல சில படங்களில் வாய்ப்புகள் பறிபோனது குறித்து ஒரு நேர்க்காணலில் அவர் கூறும்போது, ”என்னதான் பெரிய கதாநாயகர்களாக இருந்தாலும் அவர்கள் நாம் பெரிதாக வெளியில் தெரிய கூடாது என நினைக்கின்றனர்” என மிக வெளிப்படையாக கூறியுள்ளார் ராதா ரவி.