1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (18:41 IST)

’காதல் கோட்டை’ தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது.. என்ன காரணம்?

தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வான்மதி, காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள் உட்பட பல வெற்றி படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.


இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூபாய் 85 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததாகவும் இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது

Edited by Siva