லைவ் சாட்டில் எல்லை மீறிய ரசிகர்… கண்டுகொள்ளாமல் விட்ட பிரியா வாரியர்!
மலையாள நடிகையான பிரியா வாரியர் தன்னுடைய ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய 'ஒரு அடார் லவ்'. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. ஆனாலும் பிரியாவின் புகழ் குறையவில்லை. இப்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிரியா தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் உரையாடலில் கலந்துகொண்டார். அப்போது ஒரு ரசிகர் உங்கள் உதடு மிகவும் அழகாக உள்ளது. அதை எப்படி கடித்தால் உங்களுக்கு பிடிக்கும்? என எல்லை மீறிக் கேட்டார். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பிரியா வாருங்கள் சொல்லி தருகிறேன் எனக் கூலாக பதில் சொல்லிவிட்டு அடுத்த ரசிகரிடம் சென்றுவிட்டார்.