திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (10:56 IST)

புடவையிலேயே இவ்வளவு கிளாமரா? வைரலாகும் அனு இம்மானுவேல் புகைப்படங்கள்!

நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகைகள் இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கின்றனர். அதனால் தினமும் தங்களை தாங்களே வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவேற்றி ரசிகர்களை உற்சாகமூட்டி வருகின்றனர். அந்த வகையில் மாளவிகா மோகனன், நிவேதா பெத்துராஜ், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், என்னை அறிந்தால் புகழ் பேபி அனிகா போன்றவர்கள் வரிசையாக தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வரிசையில் இப்போது துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை புகழ் அனு இம்மானுவேலும் இணைந்துள்ளார். வரிசையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இப்போது நீல நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.