வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:09 IST)

நாங்களும் மனுஷங்கதான்… விமர்சனங்கள் வந்தால் பரவாயில்லை – பிரியா பவானி சங்கர் ஆதங்கம்!

சின்னத்திரை நடிகைகளுக்கு ஒரு புதிய பாதைய வகுத்துக் கொடுத்தவர்தான் பிரியா பவானி சங்கர். தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர்.

மேயாத மான் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையானார் பிரியா. இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதிலும் பிரியாவின் கதாபாத்திரம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் அவர் தனிப்பட்ட முறையிலும் ராசியில்லாத நடிகை என்று கேலிகளுக்கு ஆளானார்.

இதுபற்றி டிமாண்டி காலணி 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரியா பவானி சங்கர் , “உங்களைப் பற்றி தவறாக பேசினால் எப்படி உங்களுக்கு கஷ்டமாக இருக்குமோ, அதுபோலதான் நடிகர்களுக்கும். நாங்களும் மனுஷங்கதான். திரைப்படங்களைப் பற்றி விமர்சனங்கள் வந்தால் அது பாசிட்டிவ்வாக இருந்தாலும் நெகட்டிவ்வாக இருந்தாலும் அதை ஏற்றுகொள்ளதான் வேண்டும். ஆனால் சமூகவலைதளங்களில்  முகம் தெரியாத மனிதர்கள் தனிநபர் தாக்குதல்களை நடத்துவதுதான் கஷ்டமாக இருக்கிறது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.