வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:59 IST)

என் கல்யாணம் எப்போது?... சீக்ரெட்டை உடைத்த பிரியா பவானி சங்கர்!

சில தசாப்தங்களுக்கு முன்பெல்லாம் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அப்படி சின்னத்திரை நடிகைகளுக்கு ஒரு புதிய பாதைய வகுத்துக் கொடுத்தவர்தான் பிரியா பவானி சங்கர். தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர்.

மேயாத மான் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்து முன்னணி நடிகையானார் பிரியா. இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராஜவேல் என்பவரைக் காதலித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய திருமணம் எப்போது என்பது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “திருமணம் எல்லாம் கல்லூரி முடித்தவுடனேயே பண்ணியிருக்க வேண்டும். இப்போது சோம்பேரித் தனமாக இருக்கிறது. அதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நான் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளலாம் என்றிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.