“நம்ம படத்துல அந்த பாட்டு இல்லம்மா”… இயக்குனர் ஹரி பற்றி பிரியா பவானி சங்கர் சொன்ன சுவாரஸ்ய தகவல்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் யானை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி மற்றும் ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் யானை திரைப்படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய பிரியா பவானி சங்கர் “ எப்போதும் ஹரி சார் படத்தில் ஒரு செட் பாட்டு இருக்கும். நான் சார் என்ன ஒப்பந்தம் செய்யும் போதே அதுபற்றி அவரிடம் கேட்டேன். சார் எப்போ சார் அந்த செட் பாட்டுன்னு. அதுக்கு அவர் நம்ம படத்துல அந்த பாட்டு இல்லம்மா. நான் இப்போது அப்கிரேட் ஆகிட்டேன்னு சொன்னாரு. அதனால நம்ம படத்துல அப்படி ஒரு பாட்டு இல்ல” என்று கூறினார்.