வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (10:55 IST)

யானை ப்ரஸ் மீட்டில் திடீர்னு கெட்டவார்த்தை பேசி ஜர்க் ஆன இயக்குனர் ஹரி!

யானை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அருண் விஜய் முதல் முறையாக அவருடைய அக்கா கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார்.

இந்நிலையில் யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் “யானை சென்சாருக்கு தயாராகி வருகிறது. விரைவில் டிரைலர் வெளியாகும்” என அருண் விஜய் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து நேற்று யானை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் ஹரி படம் பற்றி பல விஷயங்களை பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீர்னு கெட்டவார்த்தை ஒன்றைப் பேசிவிட அனைவரும் முகம் சுளித்தனர். பின்னர் தான் பேசியதை உணர்ந்த அவர் சிரித்து நிலைமையை புரிந்துகொண்டு மீண்டும் பேசினார்.