1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 மே 2022 (17:01 IST)

டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் டான் வசூல் பற்றி படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 12 நாளில் டான் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் இந்த திரைப்படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.