வாரிசு படத்துக்கு நல்ல ரிவ்யூ சொன்னா ரூ.1 கோடி! – யூட்யூபர்களிடம் டீல் பேசிய வாரிசு டீம்?
விஜய் நடித்துள்ள வாரிசு படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு நல்ல ரிவ்யூ சொல்ல சொல்லி பிரபல யூட்யூபர்களுக்கு வாரிசு படக்குழு ரூ.1 கோடி கொடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. அஜித்தின் துணிவு படமும், வாரிசு படமும் நாளை ஒரே நாளில் திரையரங்களில் வெளியாகிறது. இதற்காக அஜித், விஜய் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடம் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு செய்தி சேனல் விஜய்யின் வாரிசு படக்குழுவினர் பிரபல யூட்யூப் திரைவிமர்சகர்களான ப்ரசாந்த், ப்ளூசட்டை மாறன் உள்ளிட்டோருக்கு படத்தை பற்றி நல்ல ரிவ்யூ தர சொல்லி ரூ.1 கோடி கொடுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அஜித் ரசிகர்கள் சிலரும் இதை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த செய்தி பொய் என்று கூறும் வகையில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ள யூட்யூபர் பிரசாந்த் “இந்த செய்தியை உண்மை என்று என் சொந்தக்காரர்கள் நம்புகின்றனர். ஏற்கனவே அவர்கள் என்னை ரொம்ப மதிக்க தொடங்கி விட்டார்கள். நன்றி பாலிமர்! இதை வெச்சே இந்த வருஷம் கெத்தா ஓட்டுறோம்” என கூறியுள்ளார்.
Edit By Prasanth.K