திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (08:51 IST)

யாரு நம்பர் 1… தில் ராஜு கருத்துக்கு ‘நச்’ பதிலளித்த போனி கபூர்!

தில் ராஜு சில வாரங்களுக்கு முன்னர் விஜய் தான் நம்பர் 1 எனப் பேசியது சர்ச்சைகளை உருவாக்கியது.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். படத்தின் ரிலீஸ் குறித்து “துணிவு படத்தின் விநியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென கேட்க போகிறேன். தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1” என்று கூறியுள்ளார்.

இதற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இப்போது துணிவு திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய போனி கபூர் “எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை கதைதான் நம்பர் 1. அதனால்தான் லவ் டுடே திரைப்படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆனது. நம்பர் 1 என்பதெல்லாம் சிலர் மனதில்தான் உள்ளது. அதையெல்லாம் மனதில் வைக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். ஸ்டார் நடிகர்களுக்கு நல்ல கதை கிடைத்தால்தான் மிகப்பெரிய ஹிட் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.