வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (15:52 IST)

பிச்சைக்கார தோற்றத்தில் பிருத்விவிராஜ்!

மலையாளத்தில் பிரபலமான நடிகரான பிருத்திவிராஜ் அடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 
கனா கண்டேன், மொழி சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும் உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பிருத்திவிராஜ் . இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.  தற்போது  அடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 
 
அரேபிய நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களை பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது. நஜீப் என்ற கதாபாத்திரத்தில் பிருதிவிராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் வருகிறார். பிளஸ்சி டைரக்டு செய்கிறார். மலையாளத்தில் 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். 
 
படத்தில் பிருத்திவிராஜ் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் கிழிந்த ஆடை, நீண்ட தலைமுடி மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். இந்த படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.