வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (09:02 IST)

ஒரு நைட்டுக்கு ஒரு கோடி தருவதாக படுக்கைக்கு அழைப்பு: நடிகை அதிர்ச்சி

நடிகைகளின் முகநூல் பக்கத்தில் ரசிகர்கள் ஆபாச கருத்துக்கள் பதிவிடுவது தொடர்கிறது. சிலர் மோசமான வார்த்தைகளால் வர்ணிக்கின்றனர்.

இன்னும் சிலர் படுக்கைக்கு அழைக்கின்றனர். சமீபத்தில் மலையாள நடிகை காயத்ரி அருண் என்பவரை படுக்கைக்கு அழைத்து இரவு தங்குவதற்கு ரூ.2 லட்சம் தருவதாக ஒருவர் கூறியிருந்தார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி அருண், “உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறி பதிலடி கொடுத்தார். வாலிபரின் பதிவை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டார். அது வைரலானது.
 
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை சாக்‌ஷி சவுத்ரிக்கும் இதுபோல் ஆபாச அழைப்பு வந்துள்ளது. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார்.
 
இதனால் அவருக்கு மோசமான வார்த்தைகளுடன் பாலியல் அழைப்புகள் வருகின்றன. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்த்து ஒரு இரவுக்கு ரூ.1 கோடி தருவதாக ஆபாச அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் எல்லோரும் முட்டாள்கள். நான் விற்பனைக்கு உரியவள் அல்ல” என்று கூறியுள்ளார்.