செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (20:53 IST)

பிரீத்திகா மேனன் மீது வழக்கு தொடர்வேன் : தியாகராஜன்

தற்போது நாடு முழுவதும் பூதாகரமாகி வரும் மீடூ விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகள் சிக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் மீது நடிகை பிரித்திகா மேனன் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்து தியாகராஜன் தரப்பில் இருந்து எந்த விளக்கமுன் வராமல் இருந்தது. இன்று தியாகராஜன் இது பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது:
 
என் மீது குற்றம் சாட்டிய நடிகை ப்ரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் .இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
 
சில வருடங்களுக்கு முன்பு இவரது மகனும் நடிகருமான பிரசாந்த் வரதட்சனை வழக்கில் நீதிமன்றத்திற்கு சென்று தன் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.