செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (17:34 IST)

நடிகர் அர்ஜூன் மிகவும் கேவலமாக நடந்து கொண்டதாக நடிகை சுருதி ஹரிகரன் புகார்

நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன்  கூறுகையில், "நானும் அர்ஜூனும் ‘நிபுணன்’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அதில் ஒரு பாடல் காட்சியில் அர்ஜூன் வேண்டும் என்றே என்னை பலமுறை கட்டிப்பிடித்தார். இறுக்கமாக அணைத்தார். இந்த  விஷயம் எனக்கு பிடிக்காததால், கொஞ்சம் தள்ளியே நின்றேன்.
 
படப்பிடிப்பியில் பாதியிலேயே கிளம்பிவிடலாமா என்று நினைத்தேன். ஆனால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார் என்பதால் அர்ஜூனின்  நடவடிக்கைகளை சகித்துக் கொண்டு நடித்தேன்.
 
அவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்ததும் விருந்துக்கு போகலாமா? என்று என்னை கூப்பிட்டார். ‘என் அறைக்குள் வந்து என்னை பார்’என்று பலமுறை அர்ஜுன் அழைத்தார், நான் அவரது அறைக்குள் செல்லவில்லை."
 
இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறியுள்ளார்.