1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (18:30 IST)

’தளபதி 69’ படத்தில் நடிக்க மகனுக்கு வாய்ப்பு கேட்டாரா பிரேமலதா? விஜய்யின் பதில் என்ன?

சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு விஜய் சென்றபோது தளபதி 69 படத்தில் தனது மகன் சண்முக பாண்டியனுக்கு பிரேமலதா வாய்ப்பு கேட்டதாகவும் அதற்கு விஜய் புன்னகையை மட்டுமே பதிலாக கூறியதாகவும் கூறப்படுகிறது.

கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் காட்சிகளுக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி கூறுவதற்காக சமீபத்தில் விஜய், விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பிரேமலதாவிடம் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது தனது கடைசி படம் மற்றும் அரசியல் பிரவேசம் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது செந்தூர பாண்டி திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்தது போல் தளபதி 69 படத்தில் தனது மகன் சண்முக பாண்டியனுக்கு ஒரு கேரக்டர் கொடுக்குமாறு பிரேமலதா கூறியதாகவும் அதற்கு விஜய் புன்னகையை மட்டுமே பதிலாக சொன்னதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பிரேமலதாவின் வேண்டுகோளை விஜய் பரிசீலனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva