திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (15:55 IST)

மோகன்லால் முதன் முதலாக இயக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் மோகன்லால் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நடிகர் பிரதாப் போத்தன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

மோகன்லால் போச்சுக்கீசியர்களைப் பற்றிய பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ என்னும் கதையை ப்ரோஸ் என்ற பெயரில் இயக்க உள்ளார். இந்த படம் குழந்தைகள் படமாக உருவாக உள்ள நிலையில் மையக் கதாபாத்திரமான ப்ரோஸாக மோகன்லால் நடிக்க உள்ளார். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போன நிலையில் இப்போது விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் பிரதாப் போத்தன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.