1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:01 IST)

த்ரிஷ்யம் 2 படத்தின் டுவிட்டர் விமர்சனங்கள்!

மோகன்லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் 2 படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. நேற்று இரவு முதலே இந்த படத்தை பார்க்க தொடங்கிய ரசிகர்கள் இந்த படம் குறித்த தங்களது கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகின்றனர் 
 
த்ரிஷ்யம் 2 படம் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் விறுவிறுப்பாக செல்வதாகவும் முதல் பாகத்தை விட இருமடங்கு சஸ்பென்ஸ், திருப்பங்களும் இருப்பதாகவும் டுவிட்டார் பயனாளிகள் குறிப்பிட்டுள்ளனர் 
 
குறிப்பாக இண்டர்வெல் டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது என்றும் கடைசி 45 நிமிட கிளைமேக்ஸ் இதுவரை எந்த இந்திய படத்திலும் இருக்காது என்றும் டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்
 
மோகன்லால் மற்றும் மீனா நடிப்பு மிகவும் அபாரம் என்றும் முதல் பாகத்தை விட இருமடங்கு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் த்ரிஷ்யம் 2 படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பது படக்குழுவினர் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.