பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா? விரைவில் ஷூட்டிங்!
நயன்தாரா மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா 2009 ஆம் ஆண்டு வில்லு படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார். அந்த காதலுக்காக பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்து செய்ய, நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். இருவரும் மும்பையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். நயன்தாரா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். அதே போல பிரபுதேவாவும் இப்போது தமிழ் சினிமாவில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது என சொல்லப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா தனது இன்னொரு முன்னாள் காதலர் சிம்புவுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.