செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (17:12 IST)

ரஜினி ஷூட்டிங் வர்றமாதிரி இல்லை… அதனால் செட்டை வாடகைக்கு விட்ட அண்ணாத்த டீம்!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்காக போடப்பட்ட செட் ஒன்றை இப்போது ஆனந்த் ஷங்கர் இயக்கும் விஷால் படத்துக்காக பயன்படுத்திக் கொள்ள உள்ளனராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்தது ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது .

ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தால் உடனே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் ஆனால் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதக கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இப்போதைக்கு அண்ணாத்த ஷூட்டிங் நடப்பது போல தெரியவில்லை. அதனால் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள செட்டை இப்போது இன்னொரு படத்துக்காக பயன்படுத்திக் கொள்ள உள்ளனராம். விஷால் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் சில காட்சிகளை அந்த படத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.