வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (16:23 IST)

பிரபாஸின் 'சாஹோ' ரிலீஸ் தேதி வெளியானது !

பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். 


 
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது. பிரபாஸின் 19-வது படமான இதனை சுஜீத் ரெட்டி இயக்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் இதில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். 
 
பிரபாஸுடன் ‘கத்தி’ பட வில்லன் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஜாக்கி செராஃப், மந்திரா பேடி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஷங்கர்-எஸ்ஸான்-லாய், தமன் இசையமைக்கிறார்கள். 
 
இந்நிலையில் 'சாஹோ' திரைப்படம் வரும் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.