வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (11:36 IST)

அர்ஜூனனாக பிரபாஸ்! மகாபாரதம் படம் குறித்து முக்கிய தகவல்

இந்தியில் ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள மகாபாரத கதையில் அர்ஜூனனாக பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாகுபலியின் வெற்றிக்கு பிறகு பல மொழிகளில் வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படங்களை தயாரிப்பது, அதிகரித்து உள்ளது.
 
அந்த வகையில் ராணி பத்மினி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பத்மாவத் என்ற திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து ஜான்சிராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிவருகிறது.
 
அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் சைரா என்ற பிரம்மாண்ட வரலாற்று படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். 
 
இந்நிலையில் இந்தியில் மகாபாராதத்தை அடிப்படையாகக் கொண்டு ரூ.1000 கோடி பொருட் செலவில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது. இதில் பாகுபலி நாயகன் பிரபாஸ் அர்ஜூனன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் கிருஷ்ணனாக நடிக்க பாலிவுட் நடிகர் அமீர் கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.