வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:32 IST)

சம்பாதித்த பணத்தை கொட்டி கொடுத்த பாகுபலி ஹீரோ

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிறகு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபாஸுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தது. 
பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடர்ந்து ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ் 
 
இந்நிலையில், அவர் சம்பாதித்த பணத்தை மல்டிபிளக்ஸ் சினிமா திரையரங்கில் முதலீடு செய்துள்ளார். ஆந்திராவின் நெல்லூரில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் UV Creations நிறுவனத்தின் தியேட்டர் தானாம் அது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய தியேட்டர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
அதனால் தான் சம்பாதித்த பலகோடி ரூபாயை கொட்டி கொடுத்து முதலீடு செய்துள்ளார் நடிகர் பிரபாஸ்.