திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (18:15 IST)

சாஹோ படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அருண் விஜய்

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் கலந்து கொள்கிறார்.
 
'பாகுபலி' என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. சுஜீத் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரத்தா கபூர்  நடிக்கிறார்.
 
மேலும், இப்படத்தில் நீல் நிதின் முகேஷ், அருண்விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, லால், ஜாக்கி ஷராப் ஆகியோர் நடிக்க ஹங்கர்- எஷான்- லாய் இசையமைத்திருக்கிறார்கள். 
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அபுதாபியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நடிகர் அருண் விஜய் கலந்து கொண்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.