வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (17:55 IST)

பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம் : ரசிகர்கள் சோகம் !

புழல் உள்ளிட்ட சில தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புழல் என்ற  படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் மனோ.இவர் , தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராகவும் இருந்தார்.
 
இந்நிலையில் தீபாவளி அன்று ( 27) மாலை வேளையில் நடிகர் மனோ மற்றும் அவரது மானைவி லிவியா இருவரும் சென்னை ஆவடி அருகே சென்று கொண்டிருந்தனர். மனோ காரை ஓட்டியுள்ளார். அப்ப்போஒது அவரது கார் , ஓரு இன்ஜினியரிங் கல்லூரி அருகே விபத்துக்குள்ளாகி . இதில், மனோ சம்பவ இடத்திலேயே பலியானார். லிவியா  தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மனோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
மனோவின்,குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோருக்கு அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.