திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (13:36 IST)

சைக்கிளில் சென்று தேர்தலில் வாக்களித்த முதல்வர்..

ஹரியானாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், சைக்கிளில் சென்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் சாமானிய மக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், கர்னால் தொகுதியில் வாக்களிப்பதற்காக இன்று காலை சண்டிகரிலிருந்து ஜன்சாதப்தி விரைவு ரயிலில் கர்னால் வந்து இறங்கினார். பின்பு ரயில் நிலையத்திலிருந்து இ-ரிக்சாவில் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த வாக்குசாவடிக்கு சைக்கிளில் சென்று தனது வாக்ககை பதிவு செய்தார். இந்த செயல் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.