1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (14:29 IST)

50 நாள், ரூ.500 கோடி: ‘பொன்னியின் செல்வன்’ குறித்து லைகா டுவிட்!

Ponniyin selvan
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகி உள்ளதாகவும் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. 
 
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. 
 
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆனதை அடுத்து லைகா நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளது. அந்த டுவிட்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 50 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
 
தமிழில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் பொன்னியின் செல்வன் ‘  தான் மிக அதிக வசூல் செய்து உள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran