செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:59 IST)

டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்த ''பொன்னியில் செல்வன் -1'''

ponniyin selvan
பொன்னியில் செல்வன் -1 திரைப்படம் டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

படத்துக்கான முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது. மற்ற திரைகளில் இன்று இரவு முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்துக்கு முதல் நாள் முதலே அரசு நிர்ணயித்த விலையில்தான் டிக்கெட்களை விற்கவேண்டும் என தயாரிப்பாளரும் இயக்குனருமான மணிரத்னம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு தமிழில் உருவான சரித்திரப் படைப்பாக பொன்னியின் செல்வனுக்கு  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது,  பொன்னியின் செல்வனை பார்த்தபின்,  வேற்று மொழிப் படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பொ.செ-1 டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது சனிக்கிழமை இரவில்  தொடங்கிய முன்பதிவில், இதுவரை,225 திரையரங்குகளில் மட்டும்  2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் ரூ.4.50 கோடி வசூலாகியுள்ளதாகவும்,  மற்ற தியேட்டர்களில் இன்றும் நாளையும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.